Published Date: November 12, 2025
CATEGORY: CONSTITUENCY
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி மதுரை விராட்டிபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டர்ப் கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சேம்பியன் பட்டம் வென்றது.அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பரிசுகள் வழங்கினார்.
தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை விராட்டிபத்தில் மாநில அளவிலான டர்ப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. மதுரை மாநகர் தி.மு.க முன்னாள் மாமன்ற உறுப்பினர் குடைவீடு அருண்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டிகளில் மதுரை, சேலம், நாமக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டிகளை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி, எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் முதல் பரிசு சேலம் விஸ்போர்ட்ஸ் அணிவென்று 50,000 ரொக்கப் பணம் மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசை மதுரை கேம் ஆன் அணி வென்று 40,000 ரொக்கம் மற்றும் கோப்பையையும், மூன்றாம் பரிசை மதுரை பாதா ஸ்போர்ட்ஸ் கிளப் அனிவென்று 30,000 ரொக்கம் மற்றும் கோப்பையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் இந்நிகழ்வில் தத்தனேரி பகுதி செயலாளர் நீலமேகம், தி.மு.க. நிர்வாகிகள் மகேந்திரன், ஜெகன் இந்திரஜித் கோபி சங்கர் உள்ளிட்ட திரளான தி.மு.க நிர்வாகிகள், தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Media: Dinakaran